Close
நவம்பர் 22, 2024 12:55 காலை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலைய புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்படுமா ?

புதுக்கோட்டை

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையம்

பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் பூட்டிக்கிடக்கும்  புறக்காவல் நிலையத்தை மீண்டும்  இயங்கச் செய்ய வேண்டுமென அனைத்துத்தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில்  கடந்த  பலமாதங்களுக்கு முன்னர் இயங்கி வந்த  புறக்காவல் நிலையம் தற்போது மூடப்பட்டு கிடக்கிறது.

பேருந்து நிலைய வளாகத்தில் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தபோது  இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் குறைந்திருந்தது.  காவல்துறையினர் இங்கு பணியில் இருந்து  கண்காணித்து வந்ததால் சமூக விரோதிகளின் குற்றச்செயல்களும்  குறைந்தே காணப்பட்டது.

இந்நிலையில் இப்புறக்காவல் நிலையம் சில மாதங்களாகவே பூட்டியே கிடைப்பதால் வெளியூரிலிருந்து பொன்னமராவ திக்கு வரும் பொது மக்கள்   பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல்களை அறிந்து  கொள்ள முடியாத சூழ் நிலை உருவாகி உள்ளது.

மேலும் இப்புறக்காவல் நிலையத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா உள்ளதால்,  தினமும் போலீஸார்  பணியில்  இருக்க வேண்டும். அப்படி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலருக்கு  கவனச்சிதறல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில்  கழிவறை, தண்ணீர்  போன்ற அடிப்படை வசதி  செய்து கொடுத்து  மீண்டும் இப்புறக்காவல் நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 இது சம்பந்தமான திருச்சி சரக காவல்துறைத் தலைவர் சந்தோஷ்குமார், துணைத் தலைவர் சரவண சுந்தர், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்டோர்   நடவடிக்கை மேற்கொண்டு பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறந்து வைத்து பொது மக்களுக்கு தேவையான உதவிகளை காவல்துறை மூலம் கிடைக்கச் செய்ய  வேண்டுமென  பொன்னமராவதி பகுதி சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர்  கோருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top