Close
செப்டம்பர் 19, 2024 7:01 மணி

28 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயத்தொழிலாளர்கள்

ஒன்றிய பாஜக மோடி அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த மத்திய சட்டத்தை நிறைவேற்றிடவும், ஏழை, எளிய மக்களின் 28 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இடதுசாரி விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இடதுசாரி விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் மாவட்டத் தலைவர்கள் எம்.சண்முகம், ஆர்.முருகானந்தம், கா.சோதிவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து ஏனாதி ஏ.எல்.ராசு பேசினார். வீ.மூ.வளத்தான் கோரிக்கைகளை  விளக்கிப் பேசினார்.

கோரிக்கைகளை ஆதரித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சி.சோமையா, விதொச மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் க.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சந்திரன் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top