Close
நவம்பர் 21, 2024 11:52 மணி

குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்குமா?

ஈரோடு

குறு அங்கன்வாடி பணியாளர்களுக் பதவி உயர்வு கிடைக்குமா?

தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவுக்கு பிறகாவதுகுறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்குமா?

தமிழகம் முழுவதும் பணியாற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு, தலைமை செயலாளர் உத்தரவுக்கு பிறகாவது பதவி உயர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அங்கன்வாடி பணிகள் மட்டுமின்றி மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் சரிபார்ப்பு, வாக்குச்சாவடி பணிகள், குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் சார்ந்த பணிகளையும் கடைக்கோடி மக்கள் வரை கொண்டுபோய்ச் சேர்ப்பதில் இவர்கள் பெரும்பங்கு வகித்து வருகின்றனர்.
கடந்த 2020 ம் ஆண்டில் இருந்து ஏஎன்எம் பயிற்சிக்கு முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள் மட்டுமே பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுகிறது. நடப்பு 2022–2024 -ஆம் ஆண்டுக்கு 504 பேருக்கு பயிற்சி வழங்கவதற்கான அறிவிப்பை, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை வெளியிட்டு உள்ளது. ஆனால். குறு அங்கன்வாடியில் கடந்த 5 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றிய போதும், அவர்களுக்கு முதன்மை அங்கன்வாடி பணியாளர் பதவி உயர்வு வழங்கப்படாததால் ஏஎன்எம். பயிற்சிக்கு செல்ல முடியாமல் உள்ளனர்.

பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனதலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.உத்தரவுக்கு பிறகாவது குறு அங்கன்வாடி பணியாளர்களுக் பதவி உயர்வு கிடைக்க வேண்டுமென
அங்கன்வாடி பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்

இது குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் கூறுகையில்,  குறு அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர். இதனால், ஏஎன்எம். பயிற்சிக்கு போகவில்லை.மேலும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு  ஊதியம் 6 ஆயிரம் கிடைக்கிறது. இவ்வாறான நிலையில் பதவி உயர்வு வழங்கினால் கூடுதல் பயனடைவர் என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top