புதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவை பக்தர்கள் உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடினார்கள்.
புதுக்கோட்டை நகரில்பல்லவன்குளம் கிழக்குப்புறமுள்ள சீதாபதி கிருஷ்ண விநாயகர்கோவிலில் காலையில் கணபதி ஹோமம் மற்றும் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடை பெற்றது. பின்னர் வெள்ளிக்காப்பு மலர் அலங்காரம் செய்து தீபராதனை நடைபெற்றது.
இதேபோன்று பல்லவன்குளம் மேற்குப்புறமுள்ள சதுர்த்தி விநாயகர்கோவில், புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகிலுள்ள சங்கீதமங்கல விநாயகர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
மேலும் தமிழகத்தின் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா திருத்தேரோட்டம் கொட்டும் மழையில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள உலக பிரசித்திபெற்ற குடவரைக் கோவிலான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவானது கடந்த 22 -ஆம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது.
உற்சவரான கற்பக விநாயகர், தினமும் பல்வேறு வெள்ளி வாகனங்களில் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். விழாவில் முக்கிய நாளான நேற்று திருத்தேரோட் டம் நடைபெற்றது. பெரிய தேரில் உற்சவரான கற்பக விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோன்று சிறிய தேரில் சண்டிகேஸ்வரர் அருள்பாலித் தார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு .பக்தர்களும் உற்சாகத் துடன் கோயில் விழாக்களிலும், ஆன்மீக நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடைபெற வுள்ள விநாயகர் சதுர்த்தி விழா முன் எப்போதும் இல்லாத வகையில் பிரமாண்டமாகக் கொண்டாடினர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களின் போது அசம்பாவிதங்கள் நடை பெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.