Close
நவம்பர் 22, 2024 6:54 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 704 இடங்களில் விநாயகர் சிலை வைக்க காவல்துறை அனுமதி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை திலகர் திடலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை

புதுக்கோட்டையில்    விநாயகர் சதுர்த்தி விழாவை பக்தர்கள்  உற்சாகத்துடன்  கொண்டாடினா். நகரில் பல்லவன்குளம் கிழக்கு கரையில்  சீதாபதி  கிருஷ்ண விநாயகர் கோவிலில் காலையில்  கணபதி ஹோமம் மற்றும் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது.
பின்னர் வெள்ளிக்காப்பு  மாலையில் சந்தனக் காப்பு  மலர் அலங்காரத்தில்         தீபராதனை நடைபெற்றது.  இதேபோன்று பல்லவன்குளம் மேற்குப்புறமுள்ள சதுர்த்தி விநாயகர் கோவில்    மேலராஜவீதி    தண்டாயுதபாணி திருக்கோவிலில் வல்லப விநாயகர் வெள்ளிக்காப்பு    மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் நகரில் பல்வேறு கோவில்களில்  விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக  நடந்தது.
புதுக்கோட்டை
மேலராஜவீதி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவிலில் வல்லப விநாயகர் வெள்ளிக்காப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
மாவட்டத்தில் 704  இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 704 இடங்களில் சிலை வைத்து வழிபட புதுக்கோட்டை மாவட்ட போலீஸார் அனுமதியளித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி (ஆக.31) புதுக்கோட்டை நகர், கீரனூர், இலுப்பூர், அறந்தாங்கி, பொன்னமராவதி, கோட்டைப்பட்டினம், ஆலங்குடி உள்ளிட்ட 7 காவல் துணைக் கோட்டங்களில் 704 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த போலீஸார் அனுமதி அளித்துள்ளனர்.
புதன்கிழமை மாலைக்குள் இந்த இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. அனைத்து இடங்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top