புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அம்மன்பட்டியில் ஸ்ரீ தெற்கு வாசல் கருப்பர் கோவில் வீடு, ஸ்ரீ மதுரை வீரன் கோவில் வீடு ஆகியவற்றுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்ட திருமயம் அருகே அம்மன் பட்டியில் ஸ்ரீ தெற்கு கருப்பர் கோவில் வீடு ஸ்ரீ மதுரை வீரன் கோவில் வீடு சுவாமி ஆலயத்தின் ஜீர்ணோத்தாரண புனராவர்த்தன மகா கும்பாபிசேக விழா நடைபெற்றது.
புதன்கிழமை மங்கள இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து அனுக்ஞை, மகாகணபதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதணையும் அதனைத்தொடர்ந்து முதலாம்,இரண்டாம்,மூன்றாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன.
தொடர்ந்து மண்டப சாந்தி, கோபூஜை, புண்யாஹவாசனம், சந்தியா வந்தனம்,யாத்ரா தானம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசங்களில் வைக்கப்பட்டு மூன்று நாட்களாக யாகசாலையில் வைத்து சிவாச்சாரியார்களால் பூஜை செய்யப்பட்டது.
இவ்வாறு பூஜிக்கப்பட்ட புனித நீரை மங்கல வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் யாகசாலை மற்றும் கோயிலை சுற்றி வலம் வந்து கருடபகவான் கோயில் கலசத்தை சுற்றிவர கோயில் கலசத்தில் புனித நீரை ஊற்றினர்.
இக்கும்பாபிஷேக விழாவைக்காண அம்மன் பட்டி மெய்யப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்பெற்று சென்றனர்.
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் மற்றும் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன. திருமயம்.காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.