புதுக்கோட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி முதலாம் சனிக்கிழமையை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புதுக்கோட்டையில் கீழ 3 ஆம் வீதி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முதலாவது சனிக்கிழமை (24.09.2022) சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பாலாஜிபட்டாச்சாரியார் முன்னிலையில் ஆலயத்தில் மூலவர் வரதராஜ பெருமாள் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களுடன் தீபாராதனை நடைபெற்றது.

மலர் அலங்காரத்தில் உற்சவர் வரதராஜ பெருமாள் , தேவி பூதேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.சுற்று பிரகாரத்தின் சந்நிதியில் உள்ள அலமேலுமங்கை சக்கரத்தாழ்வார் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
திரளான பக்தர்கள் அதிகாலையிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மாலையில் வரதராஜ பெருமாள் கருடசேவையில் அருள் பாலித்தார். ஏற்பாடுகளை பட்டாச்சாரியார், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.