Close
நவம்பர் 25, 2024 12:05 காலை

புதுக்கோட்டை கோயில்களில் நவராத்திரி விழா தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரியநாச்சியம்மன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சி

புதுக்கோட்டை நகரில் உள்ள கோயில்களில்  நவராத்திரி விழா  தொடங்கி உள்ளது.

இந்தாண்டு நவராத்திரி பண்டிகை நாளை செப்டம்பர் 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 -ஆம் தேதி துர்கா விசார்ஜன் மற்றும் தசரா கொண்டாட்டங்களுடன் முடிவடைகிறது.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சக்தி தேவியின் ஒன்பது அவதாரங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது. நவதுர்காவின் ஒவ்வொரு அவதாரமும் துர்கா தேவியின் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது. நவராத்திரி 9 நாட்களும் வெவ்வேறு பிரசாதங்கள் கடவுளுக்கு படைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. தமிழகத்தில் வீடுகள், கோயில்களில் வண்ண மயமான, வித்தியாசமான கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி 9 நாட்களும் விமரிசையாக கொண்டாடப்படும். பெண்கள் 9 நாட்களும் தங்களை அலங்கரித்து பூஜை செய்து வழிபடுவர்.

புதுக்கோட்டை சாந்தநாதர் சந்நிதி அருகிலுள்ள அரியநாச்சி அம்மன்கோவிலில் அமாவாசைதினத்தில்  நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது.  பக்தர்கள் ஆர்வமுடன் வருகை தந்து அரியநாச்சி அம்மனை வணங்கி  நவராத்திரி கொலுவை கண்டு களித்தனர்.

விநாயகர்,முருகன்  மீனாட்சி சுந்தரேசுவரர், சக்கரத்தாழ்வார், தெட்சிணாமூர்த்தி, அன்னபூரணி, சிவன், வராகி அம்மன், கற்பக விநாயகர், ராஜகணபதி,  சரஸ்வதி, பெருமாள், ஆஞ்சநேயர்மேலும் ராமர், சீதை, வயதான தாத்தா, பாட்டி பொம்மைகள், மீனாட்சி திருக்கல்யாணம், சீனிவாசர் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், சரவண பொய்கை, சிவபெருமான்,  விவசாயத்தை பிரதிபலிக்கும் பொம்மை செட்டுகள் பாடசாலை திருமணக்கோலம்வளைகாப்பு   இதேபோன்று தலைவர்களின் உருவ பொம்மைகளும். கொலுவில் இடம்பெற்றுள்ளன.

இதைமுன்னிட்டு அரியநாச்சிஅம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பலித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top