Close
செப்டம்பர் 20, 2024 1:30 காலை

தீபாவளி திருநாள்… பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை

தீபாவளியைமுன்னிட்டு புதுக்கோட்டை கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு

தீபாவளி திருநாளில் புதுக்கோட்டையிலுள்ள பல்வேறு கோவில்களில்  சிறப்பு வழிபாடு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டையிலுள்ள பல்வேறு கோவில்களில் தீபாவளி திருநாளையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தன. புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு  முத்துமாரியம்மன் கோயிலில் தீபாவளி திருநாளையொட்டி அருள்மிகு  முத்துமாரியம்மனுக்கு  சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது.  பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து  கொண்டனர்.

புதுக்கோட்டை குமரமலை பாலதெண்டாயுதபாணி  திருகோயிலில் தீபாவளி பண்டிகை  சிறப்பு வழிபாடு குமரமலை பாலதண்டாயுதபாணி கோயிலில்  தீபாவளி பண்டிகை நடைபெற்ற  சிறப்பு வழிபாடு புதுக்கோட்டை குமரமலை பாலதெண்டாயுதபாணி கோயிலில்   சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

குமரமலை  பாலதெண்டாயுதபாணி கோவிலில்  முன்னிட்டு    பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது .இதில்,   அந்தப் பகுதியிலுள்ள பக்தர்கள் திரளாக வந்திருந்து   வழிபட்டனர் .

ஏற்பாடுகளை பாலாஜி வைரவமூர்த்தி  மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். புதுக்கோட்டை மேல ராஜ வீதிலுள்ள அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் திருக்கோகர்ணம்  பிரஹதாம்பாள் திருக்கோவில்    பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் திருக்கோவில் உள்ளிட்ட கோவில்களில்  சிறப்பு வழிபாடு  நடைபெற்றது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top