பொற்பனைக்கோட்டை பொற்பனைமுனீஸ்வரர் கோயிலில் , ஐப்பசி மாத அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
புதுக்கோட்டை அருகிலுள்ள பொற்பனைக் கோட்டை பொற்பனை முனீஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டும் பொற்பனை முனீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
முனீஸ்வரருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வெள்ளி அங்கி கிரீடத்துடன் வடைமாலை மற்றும் மலர் அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.
ஏற்பாடுகளை பழனியப்பன் பூசாரி தலைமையில் பூஜகர்கள் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் வருகைதந்து சாமி தரிசனம் செய்தனர் .பின்னர் அனைவருக்கும் அன்னதானம் சிறப்புடன் நடைபெற்றது