மதுரை நகரில் உள்ள கோயில்களில், கந்த சஷ்டியை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயம், மதுரை தாசில்தா நகர் சித்தி விநாயகர் ஆலயம், மதுரை தாசில்தார் நகர் சௌபாக்கி விநாயகர் ஆலயம், சோழவந்தான் அருள்மிகு பிரளயநாதசுவாமி சிவன் ஆலயம்,தென்கரை மூலநாத சுவாமி ஆலயம் ஆகிய கோள்களில் கந்தசஷ்டி விழா முன்னிட்டு சிறப்பு அபிஷே பூஜை நடைபெற்றது.
முன்னதாக, முருகன் மற்றும் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தியதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. சில கோவில்களில், முருகனுக்கு அன்னப் பாவாடை பூஜைகள் நடந்தது.
இதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப் பட்டது. திருக்கல்யாணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாரங்கள் வழங்கப் பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.