Close
நவம்பர் 22, 2024 5:40 காலை

திருப்புகழ் ஜோதி திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு தினம்…

தமிழ்நாடு

கிருபானந்தவாரியார் சுவாமிகள் நினைவுதினம்

திருப்புகழ் ஜோதி திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு தினம் (நவ.7) இன்று..

தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் வாரியார்.

கிருபை” என்றால் கருணை என்றும், “ஆனந்தம்” என்றால் இன்பம் என்றும், “வாரி” என்றால் பெருங்கடல் என்றும் பொருள். இவர் பெயருக்கேற்ப கருணையே உருவாக, பிறரை தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார்.

தமிழ் இலக்கியத்திலும், ஆன்மிகத்திலும் தனித் திறன் பெற்றிருந்த, அறுபத்து நான்காவது நாயன்மாராக வைத்து எண்ணப்படும் போற்றுதலுக்கும் ஏத்துதலுக்கும் உரிய வாரியார் சுவாமிகள் பேசியது, எழுதியது எல்லாமே தமிழ், சைவம் மற்றும் வைணவத்திற்கு ஆற்றிய அரும்பெருந் தொண்டாகும்.

வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.

வாரியாரின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் அற்புத மானது. ஆழ்ந்த கருத்துக்களை, எளிய நடையில், இனிய முறையில், அனைவருக்கும் புரியும்படி விவரிக்கப்பட்டி ருக்கும்.
தமிழுக்கும் சமயத்திற்கும் அவர் ஆற்றிய தொண்டைவிட பேச்சுக்கலைக்கு அவர் ஆற்றிய தொண்டு அளப்பரியது. எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் கூட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பார். நகைச்சுவையை வழங்குவதில் அவருக் கென்று ஒரு தனி நடை இருந்தது. அவரைப்போல் திறமயான பேச்சாளர்கள் அவருக்குப் பின் உருவாகவே இல்லை.

வாரியார் பல ஆலயத் திருப்பணிகளை செய்தார். அதைவிட அவர் பேச்சால் பல இலக்கிய சமய அறிவை மீட்டெடுத்தார். அதை விட அதி உன்னதமானது. அவர் அக்கால குழந்தைக ளிடம் அவர் பணியை செய்தது. பல பேச்சாளர்களை உருவாக்கியது..

இவரிடம் நினைவுக்குறிப்பு கையெழுத்து வேண்டுவோரிடம்,
“இரை தேடுவதோடு இறையையும் தேடு” என்ற வாக்கியத்தை யே பெரும்பான்மையாக எழுதிக் கையெழுத்து இடுவார் .

ஆன்மீகமும் பக்தியும் இந்த மண்ணில் இருக்கும்வரை வாரியாரின் புகழ் நிலைத்திருக்கும்..,

…. இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top