புதுக்கோட்டையில் கார்த்திகை மாதம் பிறந்ததை யொட்டி பல்வேறு கோயில்களில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வியாழக்கிழமை விரதத்தை தொடங்கினர்.
புதுக்கோட்டை சின்னப்பா நகர் ஐயப்பன் திருக்கோயிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களுடைய விரதத்தை தொடங்கினர். ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்தர்களுக்கு காளீஸ்வரக்குருக்கள் மாலை அணிவித்தார்.
இதுபோல், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில், தண்டாயுதபாணி திருக்கோயி
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இன்று அதிகாலையில் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.
கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயில் நடையானது மகர, மண்டல கால விளக்கு பூஜைக்காக நேற்று மாலை திறக்கப்பட்டது. அடுத்த மாதம் 27-ம் தேதி வரை மொத்தம் 41 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று (நவ.17) தொடங்கி டிசம்பர் 27-ஆம் தேதி வரையுடன் நிறைவடைகிறது. பின்னர் டிசம்பர் 30 -ஆம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்பட்டு மகர விளக்கு பூஜை தொடங்கும். இதைத்தொடர்ந்து 2023ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டுள் ளதால் சபரிமலை தரிசனத்துக்கு இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த முறை புல்மேடு, கரிமலை, நீலிமலை ஆகிய 3 வனப்பாதைகள் வழியாகவும் பக்தர்கள் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதலே மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சென்னையில் உள்ள மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். துளசி மாலை அணிந்து பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று முழக்கமிட்டு விரதத்தை தொடங்கி னர். இதேபோல், திருச்சி, புதுக்கோட்டை மதுரை, சேலம், திண்டுக்கல், கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மாலை அணிந்து கொண்டனர்.
தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ சென்னையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்படவுள்ளது. மேலும், இன்று முதல் அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள், குளிர்சாதனமில்லா பேருந்துகள் சபரிமலைக்கு இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்திருந்தது.
இந்த பேருந்துகளின் முன்பதிவுகளுக்கு http://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இந்த சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள 9445014452, 9445017793 என்ற செல்லிடப்பேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சபரிமலைக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் இன்று பிற்பகல் 3 மணியில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.