Close
ஏப்ரல் 5, 2025 3:37 காலை

கார்த்திகை தீப விழா… கோயில்களில் தீபம் ஏற்றி வழிபாடு..

புதுக்கோட்டை

திருக்கார்த்தியையையொட்டி குமரமலையில் ஏற்றப்பட்ட தீபம்

கார்த்திகை தீப விழாவை  முன்னிட்டு  புதுக்கோட்டை குமரமலை பாலதண்டாயுதபாணி  திருக்கோயிலில் மலையின்  உச்சியில் கார்த்திகை  தீபம் ஏற்றப்பட்டது.

குமரமலைபாலதண்டாயுதபாணிகோவிலில் திருக்கார்த்தி கையை முன்னிட்டு காலையில் சுவாமிக்கு     பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது .

புதுக்கோட்டை

பின்னர் ,மலையில் உச்சியில் கார்த்திகை  தீபம் ஏற்றப்பட்டது  நிகழ்வில்அறங்காவலர் குழு தலைவர்  பா. செந்தில்குமார், செயல் அலுவலர் சா. முத்துராமன்,  புதுக்கோட்டை உதவி ஆய்வாளர் நாகராஜன், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திருக்கோயில்  பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை பாலாஜி வைரவமூர்த்தி  மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர் . இதில்  பக்தர்கள் திரளாக வந்திருந்து   வழிபட்டனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top