புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சி, கூத்தாச்சி பட்டி கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி கோவிலின் அருகே யாகசாலை பூஜை அமைக்கப்பட்டு அதில் பல்வேறு முக்கிய ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் குடத்தில் ஊற்றி வைத்து இரண்டு நாட்களாக கணபதி ஹோமம் நவகிரக கோவமும் முதல் கால பூஜை இரண்டாம் கால பூஜை என சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் புனித நீர் குடத்திற்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜையில் வைத்து பூஜைக்கப்பட்ட புனித நீர் குடத்தினை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வந்து பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காண்பித்தனர்.
இதனை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்து பெரிய நாயகி அம்மன் அருள் பெற்று சென்றனர். இதனை அடுத்து அறுசுவை அன்னதானமும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ஜெயசங்கர், ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி சாமி அய்யா, திமுக ஒன்றிய செயலாளர் சாமிநாதன், நகர்மன்ற உறுப்பி னர் செந்தாமரை பாலு, திமுக பிரதிநிதி வேலு மற்றும் பெருங்களூர் ஊராட்சி பொதுமக்கள் இளைஞர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.