Close
நவம்பர் 22, 2024 4:59 மணி

கூடலழகர் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு..

மதுரை

மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு விழா

கூடலழகர் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு –  கோவிந்தா… கோவிந்தா… என பக்தி பரவசத்துடன்  முழக்கமிட்டு திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற கூடலழகர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் பகல் பத்து உற்சவத்தின் போது தினமும் சுவாமி – அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று இரவு 7.15 மணிக்கு மேலவடம்போக்கி தெருவில் உள்ள சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அவ்வழியாக வியூக சுந்தர்ராஜ பெருமாளை நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைக்க பக்தர்களிடையே எழுந்தருளினார்.

சொர்க்கவாசல் திறப்பின் போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா…என பக்தி முழக்கமிட்டு பெருமாளை தரிசித்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் பெருமாள் மிதந்தவாறே கோயிலுக்கு சென்றார்.

முன்னதாக, பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு சுமார் 150 -க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதேபோல, மதுரை அண்ணாநகர், ஆலமரம் வெங்கடாஜலபதி ஆலயத்திலும், வைகுண்ட ஏகாதசியையொட்டி, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கண்டு, பெருமாளை தரிசித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top