Close
செப்டம்பர் 19, 2024 7:35 மணி

சோழவந்தானில் தை மாதம் குருவார பிரதோஷ விழா

மதுரை

சோழவந்தானில் தை மாதம் குருவார பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோயிலில் தை மாதம் குருவார பிரதோஷ விழா விமரிசையாக  நடந்தது.

இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வரலிங்கம் நந்திகேஸ்வரர் சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோயிலை சுற்றி வலம் வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் திருக்கோயிலை வலம்வந்து சிவாய நமக சிவாய நமக என்று சொல்லி வந்தனர்.சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது.

ஏற்பாடுகளை பிஜேபி விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர், எம் வி எம் குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம் வி எம் தாளாளர், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன், ஆலய நிர்வாக அதிகாரி இளமதி, கணக்கர் சி. பூபதி, எழுத்தர் வசந்த் ஆகியோர் செய்திருந்தனர்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல ,  திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலிலும், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோதைய ஈஸ்வரர் ஆலயத்திலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோயிலிலும், பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் பிரதோஷ விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top