கோபி அருகேயுள்ள அளுக்குளி சோளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பவானி ஆற்றங்கரை யிலிருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
கோபி அடுத்த அளுக்குளியில் சோளீஸ்வரர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பு யாக பூஜைகள் நடந்து வருகிறது.
இன்று காலைஸ்ரீ விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், க்ருத்திகா, ரோஹிணி ஸமேத ஸ்ரீ ஸோமதேவர் பூஜை, அங்குரார்ப்பணம், ஹோமம், ஆச்சார்யரக்ஷாபந்தனம், , பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
அதை தொடர்ந்து பவானி ஆற்றங்கரையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் முளைப்பாரி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். படித்துறையில் துவங்கிய இந்த ஊர்வலம் சக்தி ரோடு வழியாக கோயில் வரை சென்றது.
(30.01.2023) திங்கட்கிழமை: மங்கள இசை, ஸ்ரீ மஹா கணபதி பூஜை, புண்யாகவாசனம், ஸ்ரீ மஹாகணபதி மற்றும் பரிவார மூர்த்தி சுவாமிகள் அனைத்தும் கலா கர்ஷணம் செய்வித்து சிவ சூர்யன் அக்னிசங்க்ரஹணம் செய்து யாக சாலைக்கு எழுந்தருளி தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்வும்,
யாக சாலை அலங்காரம் மாலை 5.00 மணி மங்கள இசை, ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, குேம்ப பூஜை, ரித்விர் யஜமான ரக்ஷாபந்தனம், விசேஷ சந்தி, பூத சுத்தி, ப்ரதானம், ஸ்ரீ கணபதி, ஸ்ரீ சோழிஸ்வரர், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீ பாலதண்டாயுதபாணி, சண்டிகேஸ்வரர் சுவாமிகள் கலாகர்ஷணம் முதல் கால ஹோம பூஜை ஆரம்பம், மண்டா பூஜை, த்வாரபூஜை நடக்கிறது.
(31.01.2023) செவ்வாய்க்கிழமை:மங்கள இசை, விசேஷ சந்தி, ஸ்ரீ விநாயகர் பூஜை,மாலை 5.30 : மணிக்குமேல்ஆத்மார்த்த பூஜை, இரண்டாம் கால ஹோமம் பூஜை, வேத ஆகமங்கள் பாராயண பாவனாபிஷேகம், த்ரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை. மூன்றாம் கால ஹோமம் பூஜையில் விசேக்ஷ சந்தி, ஸ்ரீ விநாயகர் பூஜை. பாவனாபிஷேகம், த்ரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
(01.02.2023) புதன்கிழமை: அதிகாலை 4.00 மணிக்கு மேல் ஸ்ரீ விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், பரிவார யாக சாலை ஆரம்பம், பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், பரிவார யாக த்ரவ்யாகுதி, பூர்ணாகுதி பூஜையும்.
காலை 6.00 மணிக்கு ஸ்ரீ பரிவார மற்றும் அனைத்து பரிவார சுவாமி கோபுரம் அனைத்து சுவாமிகளுக்கும் மஹா கும்பாபிஷேகம், பிரதான யாக சாலை பூஜை துவக்கம், நாடிசந்தானம், ஸ்பர்ஸாகுதி, திரவ்யாகுதி நடக்கிறது.
காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு திருக்கோபுரம் சென்று மீன லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ வல்லபகணபதி, ஸ்ரீ பாலதண்டாயுதபாணி. ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகா ஸமேத ஸ்ரீ சோழீஸ்வர சுவாமி, சாலகோபுரம், சண்டிகேஸ்வரர் அனைத்து விமானம் திருக்கோபுரம் மஹா கும்பாபிஷேகம், உடன் மூலஸ்தான சுவாமிகள் மஹா கும்பாபிஷேகம், தசதரிசனம், தசதானம், மஹா தீபாராதனை நடைபெறுகிறது.
மாலை 6.30 மணிக்கு: அன்னதானம் மகேச்வர பூஜை துவக்கம். மஹா அபிஷேகம், அலங்காரம், உபசாரபூஜை, மஹா தீபாராதனை நடக்கிறது.