விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கோயிலில் மண்டல பூஜைகள் இன்று காலை துவங்கியது. முன்னதாக ஸ்ரீபத்திரகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயில்களில் இருந்து அம்மன் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் ஸ்ரீபத்திரகாளியம்மனும், ஸ்ரீமாரியம்மனும் கடைக்கோயிலில் வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீபத்திரகாளியம்மன் மகா கோபுர தரிசனம் காணும் நிகழ்ச்சியும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு நிர்வாகிகள் மற்றும் தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.