Close
செப்டம்பர் 20, 2024 3:47 காலை

விராலிமலை முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி தேர் திருவிழா

விராலிமலை

விராலிமலை முருகன் கோயிலில் நடந்த தைப்பூச தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இங்கு முருகன் வள்ளி தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு அருணகிரிநாதருக்கு முருகன் காட்சி தந்து அஷ்டமாசித்திகளை வழங்கி திருப்புகழ் பாட வைத்த தலமாகவும் இத்தலம் விளங்குகிறது.

இத்தகு சிறப்புமிக்க இக்கோயிலில் ஆண்டுதோறும் தை தை மாதம் மற்றும் வைகாசி மாதம் என வருடத்திற்கு இரண்டு முறை தேர் திருவிழா நடைபெறுவது இந்த கோயிலின் சிறப்பாகும்

கடந்த 27 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கிய திருவிழாவானது வெகு விமரிசையாக 11 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தைப்பூச கொடியேற்றத்திற்கு பிறகு காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளி மயில் உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி அடுத்த 10 நாட்களுக்கு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பக்தர்கள் அரோகரா என்ற கோஷத்துடன்  தேர் வடத்தை பிடித்து இழுத்துச்சென்றனர். தேர்  4 ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.

அதனை தொடர்ந்து நாளை இரவு தெற்கு தெருவில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. 6 -ஆம் தேதி விடாயாற்றியுடன் விழா  நிறைவடைகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top