புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சார்ந்த அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடை பெறுவதை முன்னிட்டு கோயில் விமான பாலாலயம் நடைபெற்றது.
புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த திருக்கோகரணம் அருள்மிகு பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக பணிகள் துவங்க உள்ள நிலையில் ஆலய வளாகத்தில் முதல் கால யாக பூஜை, சந்நிதி ஹோமம் மகா பூர்ணாஹூதி மற்றும் விக்னேஸ்வர பூஜை மற்றும் புண்ணிய ஸ்தானங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் குடத்தில் வைத்து சிவாச்சாரிகள் சிறப்பு பூஜை செய்தனர்.
அதனை தொடர்ந்து புனித நீரை விநாயகர், பிரஹதாம்பாள் , கோகர்னேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்து தீபாரதனை நடைபெற்றது. இதனையடுத்து ஆலயத்திற்கு மேலே ஐந்து கோபுரங்களிலும் சிறப்பு பூஜை செய்து தீபாரதனை காண்பித்து பாலாலயம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், புதுக்கோட்டை மன்னர் ராஜகோபாலதாஸ்தொண்டையான், சாருபாலா தொண்டைமான், வீ.ஆர்.கார்த்திதொண்டைமான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை முத்துராஜா, அறங்காவல்குழுத் தலைவர் செந்தில்குமார், கம்பன் கழகச்செயலர் ரா. சம்பத்குமார், ஜெஜெ கல்லூரி செயலர் என். சுப்பிரமணியன், கல்லூரி அறங்காவலர் கவிதாசுப்பிரமணின், நகர்மன்ற தலைவர் திலகவதிசெந்தில், டாக்டர்கள் ராமதாஸ், ராமமூர்த்தி, சத்தியராம் ராமுக்கண்ணு, சத்தியபாமா மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் புதுக்கோட்டை நகர் பொதுமக்கள் கோவில் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .