Close
ஏப்ரல் 6, 2025 11:54 மணி

வெள்ளனூர் ஸ்ரீ அழகுநாச்சி அம்மன் கோயிலில் தேரோட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே வெள்ளனூர் அழகு நாச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்

புதுக்கோட்டை அருகே வெள்ளனூர் ஸ்ரீ அழகு நாச்சி அம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே வெள்ளனூர் கிராமத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை திருக்கோயிலை சார்ந்த ஸ்ரீ அழகு நாச்சியம் மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற் றத்துடன் தொடங்கியது.

திருவிழாவையொட்டி தினந்தோறும் ஸ்ரீ அழகு நாச்சி அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை சிறப்பு அலங்காரம் செய்து வீதி உலா நடைபெற்று வந்தது . அதனைத் தொடர்ந்து ஒன்பதாம் நாளான 22.2.2023- புதன்கிழமை தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ அழகு நாச்சியம் மன் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து தேரில் வைத்து தீபாரதனை காண்பிக்கப்பட்டு வான வேடிக்கை யுடன் பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

தேரின் முன்பு தாரை தப்பட்டைகள் முழங்க மேல தளத்துடன் ஸ்ரீ அழகு நாச்சி அம்மன் தேரில் அமர்ந்தவாறு முக்கிய வீதி வழியாக வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த தேரோட்டத்தில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக் கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top