புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டும் நிகழ்ச்சி தொடங்கியது. புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் முத்துமாரியம் மன் கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாவுடன் கூடிய மாசி பெருந் திருவிழாவை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 26- ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது.இதைத் தொடர்ந்து 05.03.23 அன்று இரவு மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள், முத்துமாரியம்மன் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.பின்னர் கோவில் வளாகத்தில் கொடியேற்றப்பட்டு, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. . இதில் புதுக்கோட்டை, திருவப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கோயிலில் நடைபெற்ற கொடியேற்ற வைபவத்தை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் காலை முதல் பால்குடம் எடுத்து வந்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
தேரோட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை: விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13.3.2023-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் லிடுமுறை அறிவித்துள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளனர். . விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.