Close
செப்டம்பர் 20, 2024 12:39 காலை

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழா…பக்தர்களின் பசி- தாகம் தீர்த்த ஆன்மிக ஆர்வலர்கள்

புதுக்கோட்டை

திருவப்பூர் மாசித்திருவிழாவையொட்டை நடந்த அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், எம்எல்ஏ. முத்துராஜா உள்ளிட்டோர்

புதுக்கோட்டை  திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு  பசியாற்ற அன்னதானம் மற்றும் தாகம் தீர்க்க நீர் மோர் பானக்கம்,  பழங்கள்  என நகரெங்கும்  ஆங்காங்கே   ஆன்மிக அன்பர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.
புதுக்கோட்டை  திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழா பூச்சொரிதல்  பால்குடம், வழிபாடுகள்   தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் வரும் 20.3.2023   – ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. இதையொட்டி கோயிலுக்கு வரும் பக்தர்கள் பசியாறவும் தாகம் தீர்க்கவும் பல்வேறு இடங்களில் அன்னதானமும், நீர் மோர் பந்தல்களும் நடைபெற்றன.
புதுக்கோட்டையைச் சேர்ந்த    சமூகஆர்வலர்கள், வர்த்தக நிறுவனங்கள், கல்வியாளர்கள் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அரசுப் பணியாளர், அரசியல்வாதிகள், ரோட்டரி  அமைப்பினர்கள்   உள்ளிட்டோர்   திருவப்பூர், திருக்கோகர்ணம்  உள்பட புதுக்கோட்டை நகரில் பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பொதுப் பந்தல்கள் அமைத்து அன்னதானமும்,   பலரும் தங்களது வீட்டு வாசல்களில் பந்தல்கள் அமைத்து  நீர், மோர்     பானகம், பழங்கள் வழங்கி மகிழ்ந்தனர்
புதுக்கோட்டை அரசு சிறப்பு வழக்கறிஞர்  செந்தில்குமார்   இல்லத்தில்   நடந்த   அன்னதானத்தை      தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும்  அமைச்சர்  சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்,    புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை .முத்துராஜா,  வடக்கு மாவட்ட   செயலாளர் கே.கே. செல்லப்பாண்டியன்.
நகர  செயலாளர் ஆ. செந்தில், தொழிலதிபர் எஸ்விஎஸ். ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  இதில், கல்வியாளர்கள்  தங்கம் மூர்த்தி, கருப்பையா,  ரவிச்சந்திரன் , முரளி,  மற்றும்     எஸ் . முத்துசாமி,,   க. நைனாமுகமது,  த. சந்திரசேகர்  நகராட்சி உறுப்பினர்கள்   உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோரை வரவேற்ற கல்வியாளர்கள்
அன்னதானத்தின் சிறப்புகள் குறித்து சுந்தரம் சிவனடியார் கூறியதாவது:  .அன்னதானம் வழங்குவதன் மூலம் ஆனந்த வாழ்வும் நமக்குக் கிடைக்கும். இறைவனின் பரிபூரண அருளுக்கும் பாத்திரமாக இயலும். அன்னதானம், சொர்ண தானம், வஸ்திரதானம், கோதானம், பூ தானம், கண் தானம் என்று தானங்கள் பல வகைப்படும்.
இவற்றையெல்லாம் விட ஒரு மனிதனிடம் கட்டாயம் இருக்க வேண்டிய தானம், ‘நிதானம்.’ அந்த நிதானம் நம்மோடு இருந்தால் நிம்மதி கிடைக்கும். ‘பதறாத காரியம் சிதறாது’ என்பார்கள். எனவே எதையும் நிதானமாகச் செய்ய வேண்டும்.
தானங்களில் பிறர் பசியைப் போக்கும் அன்ன தானம் முதன்மை பெறுகிறது. அன்னதானம் என்பது பிறர் பசியைப் போக்குவது. பாத யாத்திரை வருபவர்களுக்கு, ஸ்தல யாத்திரை வருபவர்களுக்கு, கிரிவலம் வருபவர்களுக்கு எல்லாம், நடந்துவரும் களைப்பைப் போக்க பல இடங்களில் பலரும் உணவளிக்கின்றனர். அதன் மூலம் அவர்களது ஆத்மாக்கள் திருப்தியுடன் நம்மை வாழ்த்துகிறது என்றார் அவர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top