புதுக்கோட்டை திருக்கோயிலைச் சார்ந்த பிரசித்தி பெற்ற நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் உண்டிய லில் 6 லட்சத்து 95 ஆயிரத்து 142 ரூபாய் ரொக்க பணமும், 215 கிராம் தங்கம், 117 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
புதுக்கோட்டை திருக்கோயிலைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் செவ்வாய்க் கிழமை கோயிலில் உள்ள 6 உண்டியல்களில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
கோயில் வளாகத்தில் புதுக்கோட்டை அறநிலையத்துறை உதவி ஆணையர் தி.அனிதா தலைமையில் ஆய்வர் யசோதா முன்னிலையில் ஊழியர்கள் மற்றும் பொன்மாரி கல்லூரி மாணவர்கள் உள்பட சுமார் 30 -க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
கோயிலின் 6 உண்டியல்களிலும் உள்ள காணிக்கைகளை எண்ணி யதில் 6 லட்சத்து 95 ஆயிரத்து 142 ரூபாய் ரொக்க பணமும், பலமாற்று பொன் -இனங்களின் வரவு 215 கிராம் ,பலமாற்று வெள்ளி – இனங்கள் வரவு 117 கிராம் ஆகியவற்றை உண்டியலில்பக்தர்கள் காணிக்கை யாக செலுத்தி இருந்தனர்.
ரொக்க பணம் வங்கியிலும் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப் பட்டது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். வருகின்ற 26-ஆம் தேதிஇந்தக்கோயிலில் பூச்சொரிதல் விழாவுடன் பங்குனி பெருந்திருவிழா தொடங்க உள்ளது.
திருவிழாவின் போது பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளால் உண்டியலில் ஏற்படும் இடநெருக்கடியை தவிர்க்கும் வகையில் முன்னதாகவே உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.