Close
செப்டம்பர் 20, 2024 6:45 காலை

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகலம்

புதுக்கோட்டை

நார்த்தாமலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவுக்கு சென்ற அம்மன் பூத்தட்டு வாகனம்

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை(26.3.2023)  கோலாகலமாக நடைபெற்றது.

புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும். வற்றாத ஆகாய கங்கை, அருமை குளம், ஜம்புகேசுவரர் சுனை, பொழுதுபடா சுனை ஆகிய புண்ணிய தீர்த்தங்கள் அமைந்த பெருமை வாய்ந்த தும், நாரதமுனி அம்பாளை வழிபட்ட மகிமையால் நாரதர் மலை என்ற இத்தலம் மருவி தற்போது நார்த்தாமலை என அழைக்கப்படுவதாக புராணக் கதையும் உண்டு.

இப்புண்ணிய தலத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு ஞாயி்ற்றுக்கிழமை இரவு பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை

இதையொட்டி புதுக்கோட்டை நகரில் டிவிஎஸ், அரசு போக்குவரத்துக்கழகம், நெல், அரிசி  மொத்த வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம்  மற்றும் நார்த்தாமலை சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் இரவு 7 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை மின் அலங்கார ஊர்திகளில் பூக்களை எடுத்துச்சென்று அம்மனுக்கு சார்த்தி வழிபாடு நடத்தினர்.

பங்குனிப்பெருந்திருவிழா: 

இக்கோயிலின் பங்குனிப் பெருந்திருவிழா 2.4.2023 –ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காப்புக்கட்டுதலுடன் தொடங்கி 11.4.2023 -ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 10 நாள்கள் நடைபெறுகிறது .
விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் உபயதாரர்களின் மண்டகப்படியும், அன்னவாகனம், ரிஷபவாகனம், சிம்மவாகனம், குதிரை வாகனம் போன்ற வாகனங்களில் அம்மன் திருவீதி உலா காட்சியும் நடைபெறும். விழாவி்ன் முக்கிய நிகழ்வாக, ஏப்.10 -ஆம் தேதி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை

 

இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழாவின் நிறைவு நாளான ஏப்.11 –ஆம் தேதி இரவு அம்மன் வீதியுலாவும், தொடர்ந்து காப்பு களைதல் மற்றும் தீர்த்தவாரி விழாவும் நடைபெற வுள்ளது.

ஏற்பாடுகளை, புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தி. அனிதா, செயல் அலுவலர் ச. முத்துராமன், தேவஸ்தான கோயில்கள் கணகாணிப்பாளர் கோ. சண்முகசுந்தரம், ஆய்வர் மா. யசோதா மேற்பார்வை யாளர் ரெ. மாரிமுத்து.

புதுக்கோட்டை தேவஸ்தான கோயில்கள் அறங்காவல் குழு தலைவர் பா. செந்தில்குமார், அறங்காவலர்கள் சி. கவிதா, ஆர்.பி.ராமச்சந்திரன், ஏ.வி. ராஜேந்திரன், கு. கணேசன் மற்றும் விழாக்குழுவினர், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top