குலமங்கலம் ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் உண்டியல் திறந்து எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை திருக்கோயிலைச் சார்ந்த பிரசித்தி பெற்ற ஆலங்குடி தாலுகா, குலமங்கலம் கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் உண்டியல்கள் எண்ணப்பட்டதில் மொத்தம் 10 லட்சத்து 53 ஆயிரத்து 411 ரூபாய் தொகையை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
புதுக்கோட்டை திருக்கோயிலைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற குலமங்கலம் ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் வியாழக்கிழமை கோயிலில் உள்ள 3 நிரந்த உண்டியல்கள் மற்றும் மாசிமகத் திருவிழாவுக்காக வைக்கப்பட்ட 8 தற்காலிக சிறப்பு உண்டியல் உள்பட 11 உண்டியல்களில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
கோயில் வளாகத்தில் புதுக்கோட்டை அறநிலையத்துறை உதவி ஆணையர் தி.அனிதா தலைமையில், நிர்வாக அலுவலர் முத்துக்குமார் ஆய்வர் புவனேஸ்வரி முன்னிலை யில் கோயில் ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் உள்பட சுமார் 30 -க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
கோயிலின் 3 நிரந்தர உண்டியல்களில் காணிக்கை எண்ணியதில் 3 லட்சத்து 65 ஆயிரத்து 280 ரூபாய் ரொக்கம், மேலும் 8 தற்காலிக சிறப்பு உண்டியல்களில் காணிக்கை எண்ணியதில் 6 லட்சத்து 88 ஆயிரத்தி 131 ரூபாய் ரொக்கமும் பக்தர்கள் செலுத்தி இருந்தனர். கோயிலின் 11 உண்டியல்கள் மூலம் மொத்தம் 10 லட்சத்து 53 ஆயிரத்தி 411 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியலில் வசூலான காணிக்கை தொகை, திருக்கோயில் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திருவிழாவின் போது பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளால் நிரந்த உண்டியலில் ஏற்படும் இடநெருக்கடியை தவிர்க்கும் வகையில் திருவிழாவுக்காக தற்காலிகமாக 8 சிறப்பு உண்டியல்கள் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.