புதுக்கோட்டையில் கிறிஸ்தவர்களின் சிலுவைப் பாதை நிகழ்ச்சியையொட்டி வடக்கு ராஜவீதி நகர் மன்றத்தில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் இயேசுவின் சிலுவையினை கையில் ஏந்தி அருட்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில், உதவி அருட்தந்தை அலெக்ஸ் முன்னிலையில் மார்த்தாண்டபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர்.
இதில், முன்னாள் நகர்மன்றத்தலைவர் துரைதிவ்யநாதன், காவல்துறை உதவி ஆய்வாளர் மரியா சாத்தோ திலக்ராஜ் அந்தோணி, எம். மத்தியாஸ் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவர்களின் தவக்காலம்
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கியது.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். அவர் அன்றிலிருந்து 3 -ஆவது நாளில் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.
அதற்கு முன்பு வரும் 40 நாட்களும், இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவ மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.கிறிஸ்தவ வாழ்வின் அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை, மன்னிப்பு ஆகியவற்றை மேன் மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும் சாம்பல் புதன் என்று அழைக்கப்படும்.
ஆஸ்வெனஸ்டே முதல் புனித வெள்ளி வரை 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்கள் துக்க நாட்கள், நோன்பு நாட்கள் என்ற பெயரிலும் கடைபிடிக்கப் படுகின்றன.
தவக்கா
அப்போது சிலுவைப் பாதை எனப்படும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.அப்போது மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் உள்ளிட்ட தீயப் பழக்கங்களில் இருந்து விடுவித்துக்கொள்ள தவக்காலம் உதவியாக இருக்கும். இந்நிலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாளாக புனித வியாழன் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை தியானிக்கும் வகையில் தேவாலயங்களில் சிலுவை பாதை வழிபாடுகள் நடக்கும். கிறிஸ்த்தவர்களின் இந்த 40 நாள் தவக்காலத்தை தொடர்ந்து குருத்தோலை ஞாயிறும், அதன் பின்னர் வருகிற ஏப்ரல் 7- ஆம் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்பட உள்ளது.
அதில் இருந்து 3-ஆம் நாள், ஏப்ரல் 9-ஆம் தேதி இயேசு கிறிஸ்து உயிர்ந்தெழுந்த உயிர்ப்பு பெருவிழா அதாவது ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.