புதுக்கோட்டை இந்து சமய அறநிலைத்துறை சார்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஸ்ரீ இராமநவமி மயோத் ஸவ வைபவ விழா சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ இராம நவமியை முன்னிட்டு தினமும் ஆன்மீகச்சுடர் ஸ்ரீமான் ஸ்ரீநிவாச சுந்தர்ராஜ பாகவதர் ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம் கடந்த வியாழக்கிழமை முதல் தினமும் நடைபெற்று வருகிறது. ஸ்ரீ இராமர் ஜனனம்- யாகம் காத்த இராமன் தலைப்பில் சுந்தர்ராஜ பாகவதர் உரை ஆற்றினார்.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற சீதா கல்யாணம் விமரிசை யாக நடைபெற்றது. பல்வேறு சிறப்பு பூஜையும் , சிறுவர் சிறுமிகளின் பக்தி பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், ஏராளனமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சீதா கல்யாண வைபவத்தை மணி குருக்கள், ரவி குருக்கள் நடத்தி வைத்தார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் இராமர் சீதை உற்சவர் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை சிறப்பு வழிபாடு நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள், முன்னதாக பக்தர்கள் சீர் வரிசை எடுத்து வந்தனர்.
நிகழ்வில் அனுமன் திருச்சபை நிர்வாகிகள்,கண்ணப்பன் கல்லூரி பேராசிரியர் நாகேஸ்வரன், தீபாராணி, ஸ்ரீதேவி, அகமதுநசீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபையினர், ஆன்மிக நெறியாளர் ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள் செய்தி ருந்தனர் 08.04.23 அன்று நிறைவு நாளில் சீதா இராமன் பட்டாபிஷேகம், ஸ்ரீ ஆஞ்சநேய ப்ரபாவம் நடைபெறவுள்ளது