Close
செப்டம்பர் 20, 2024 4:10 காலை

மகிமைநாயகி  ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கோயிலில் பங்குனி திருவிழா

புதுக்கோட்டை

புதுகை மகிமை நாயகி அம்மன் கோயிலுக்கு முளைப்பாரி எடுத்துச்சென்ற பக்தர்கள்

புதுக்கோட்டை வடக்கு மூன்றாம் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற    மகிமைநாயகி  ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கோயில் பங்குனி திருவிழா பால்குடம், தீமிதித்தல் போன்ற நேர்த்திக் கடன் நிறைவேற்றுதலுடன் விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக இக்கோயிலின் பூச்செரிதல் விழா  கடந்த 19.03.2023  ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து  பங்குனி திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளுடன் , அம்மன் வீதியுலா நடைபெற்றது.  தினமும் மண்டகப்படி நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

2.04.2023 ஞாயிற்றுக்கிழமை   மகிமை நாயகி  ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் பொங்கல்  திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தியும், மஞ்சள் ஆடை உடுத்தி பால்குடம் ஏந்தியும் அக்னி சட்டி எடுத்து வந்தும் கரும்புத் தொட்டிலில்  குழந்தையை  ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, பொங்கல் வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

புதுக்கோட்டை
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் மகிமை நாயகி முத்துமாரியம்மன் கோயில்

மாலையில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று வழிபட்டனர் இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் மலர் அலங்காரத்தில் பல்வேறு வீதி  வழியாக பவனி வந்தது. கோவிலில் மூலவர் மகிமைநாயகி  ஸ்ரீ முத்துமாரிஅம்மன் வெள்ளிக்காப்பு மலர் அலங்காரத்திலும், உற்சவர் சிம்ம வாகனத்தில் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதைத்தொடர்ந்து  03.04.2023  திங்கள்கிழமை    பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் ஏந்தியும் கோவில் முன்னர்  பூ மிதித்து வழிபட்டனர். இதில், நகர் மன்ற திமுக உறுப்பினர் செந்தாமரை பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை  விழாக்குழுவினர், சிறப்பாகச் செய்தனர்.  நிர்வாகிகள்  பக்தர்களுக்கு பிரசாதம்  வழங்கினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top