சென்னை மூவரசம்பட்டு கோயிலில் பங்குனி உத்திர நாளை முன்னிட்டு கோவில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது.
வழக்கமாக, தீர்த்தவாரி நிகழ்ச்சியில் உற்சவ மூர்ததிக ளையும், அபிஷேகப் பொருட்களையும் நீரில் 3 முறை மூழ்கடித்து எடுத்து செல்வார்கள். இந்தப் பணிகளில் அர்ச்சகர்கள் ஈடுபடுவர்.
அந்த வகையில், இன்று காலையும் கோயில் அருகே உள்ள மூவசரம்பட்டு குளத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அர்ச்சகர் கள் இறங்கினர். பின்னர் உற்சவ மூர்த்திகள் மற்றும் அபிஷேக பொருட்களுடன் அவர்கள் இடுப்பளவு உள்ள நீரில் மூழ்கினர். இரண்டு முறை எந்தப் பிரச்னையும் இல்லாமல் அவர்கள் மூழ்கி எழுந்தனர். மூன்றாவது முறையாக மூழ்கிய போது, அர்ச்சகர் ஒருவரின் கால், குளத்தில் உள்ள சேற்றில் சிக்கியது.
அவரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சியில் ஈடுபட்ட மற்ர 4 பேரும் சேற்றில் சிக்கி வெளியேற முடியாமல் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கு தகவல் சொல்லப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சரிடம் அனுமதி பெற்று சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். இதனையடுத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்ர்.
இந்நிலையில், குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 அர்ச்சகர்களின் குடும்பத்தாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கலை தெரிவித்தார். மேலும், அவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது சம்பவம் நடைபெற்ற சென்னை மூவரசம்பட்டு குளத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார். பலியான இந்த 5 பேரும் கோவில் அர்ச்சகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது