தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கோபுராஜபுரம் மாளாபுரம், அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான புஞ்சை புல எண். 18/1 பி ல் 0.18.00 ஏர்ஸ் (0.44 செண்ட்) (நத்தம் புல 0.18.00 ஏர்ஸ்) பரப்பள வுள்ள இடமானது தனிநபரால் எண்.18/1ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது.
மேற்படி ஆக்கிரமிப்பு தொடர்பாக பாபநாசம் அறநிலையத் துறையால் இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு M.P.No.52/2022-2 நாள். 22.02.2023 -ன் படி வெளி யேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி. இன்று (செவ்வாய்க்கிழமை) தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் தி. அனிதா, வட்டாட்சியர் சங்கர், நில அளவையர், பாபநாசம் சரக அறநிலையத் துறை ஆய்வர் க.லெட்சுமி, செயல் அலுவலர் கா.ஹாசினி ஆகியோருடன் வருவாய்த் துறை பாபநாசம் சரக வருவாய் ஆய்வர். கிராம நிர்வாக அலுவலர், நில அளவையார் முன்னிலையில் மீட்டு (சுவாதீனம்) கையகப்படுத்தப்பட்டது.
பாபநாசம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் பூர்ணிமா அறிவுறுத்தலின் படி, ஆய்வாளர் கலைவாணி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். மேற்படி சொத்தின் மதிப்பு சுமார் ரூபாய் 95 லட்சம் ஆகும். மேலும் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் உபயதாரர்கள் மூலம் திருக்கோயிலுக்கு திருமண மண்டபம் கட்டுவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.