Close
செப்டம்பர் 19, 2024 11:03 மணி

சோழவந்தான் ராயபுரம் ஜெர்மேனம்மாள் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

மதுரை

சோழவந்தான் அருகே ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் ஆலய திருவிழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் உள்ள புனித ஜெர்மேனம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்ற நிகழ்வில், ராயபுரம், திருமால் நத்தம் ,ரிஷபம் , நகரி, நெடுங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து ஜெர்மேனம்மால்  பங்கு பெற்றனர்.இதைத்தொடர்ந்து, திருப்பலி மறையுறை நடைபெற்றது.

தினசரி கொடி பவனி, ஜெபமாலை திருப்பணி நடைபெறும்.
வருகிற 22 -ஆம் தேதி இரவு திருவிழா திருப்பலி, தேர்ப்பவனி, கருணை ஆசீர் நடைபெறுகிறது. 23-ஆம் தேதி புது நன்மை விழா மற்றும் சப்பரத் திருவிழா தேர் பவனி நடைபெறும்.24 – ஆம் தேதி நன்றி திருப்பலி நடைபெற்று, கொடி இறக்கம் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை, ராயபுரம் ஜெர்மேனம்மாள் ஆலய பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top