Close
நவம்பர் 22, 2024 6:18 மணி

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு புதுக்கோட்டையில் வரவேற்பு

புதுக்கோட்டை

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புதுக்கோட்டை வழியாக பாதயாத்திரை சென்ற பக்தர்கள்

புதுக்கோட்டைக்கு வந்த வைத்தீஸ்வரன் கோயில் செல்லும்  பாதயாத்திரை குழுவினருக்கு ஆன்மிக அன்பர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்பளித்தனர்.

மயிலாடுதுறையில் வைத்தீஸ்வரன்-தையல்நாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சித்திரை மாதத்தின் முதல் வாரத்தின் போது பக்தர்கள் சித்ரா பவுர்ணமி விரதம் இருந்து பாதயாத்திரை சென்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

புதுக்கோட்டை
வைத்தீஸ்வரன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழசேவல் பட்டியில் இருந்து வைத்தீஸ்வரன் கோயில்  பாதயாத்திரையின் நிறைவில் தையல் நாயகி அம்மனுக்கு நாட்டுக்கோட்டை நகரத்தாரால் நகைகள் சார்த்தப்படும். இது ஆயிரம் ஆண்டுகளாக கோயிலில்  நடைபெறும் ஒரு வழக்கம். பாதயாத்திரையாக புறப்பட்டு செல்லும்  அம்மனுக்கு நகைகளை அணிவித்து வணங்குகின்றனர். மீண்டும் பாதைபடியாக பாதயாத்தி ரையாக ஊர் திரும்புகிறார்கள்.

இந்த பாதயாத்திரையின் போது மாட்டுவண்டியில் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சமைப்பதற்கு அனைத்து பொருட்களும் எடுத்துக் கொண்டு உடன் செல்கிறார்கள்.

புதுக்கோட்டை
வைத்தீஸ்வரன் கோயிலுக்கு செல்லும் மாட்டு வண்டிகள்

இந்த பாதயாத்திரை கீழசேவல்பட்டியில் தொடங்கி திருமயம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம், வழியாக வருகிற செவ்வாய்க்கிழமை வைத்தீஸ்வரன் கோவில் சென்றடையும்.

இந்த பாதயாத்திரை குழுவினர் புதுக்கோட்டை வந்தடைந்தனர். அப்போது பக்தர்களுக்கு பழம், குடிப்பதற்கு தண்ணீர், குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் கொடுத்தனர். மேலும் சிலர்  மாட்டுவண்டியில் வரும் மாடுகளுக்கு வைக்கோல் போன்ற பொருட்களும் கொடுத்தனர்.தற்போது பாதயாத்திரைக்கு செல்பவர்களின் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top