Close
நவம்பர் 22, 2024 12:51 காலை

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில்  குருபெயர்ச்சி -அட்சய திருதியை  பலராமர் ஜெயந்தி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் குருபெயர்ச்சி அட்சய திருதியை பலராமர் ஜெயந்தி நடைபெற்றது

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில் குருபெயர்ச்சி அட்சய திருதியை  பலராமர் ஜெயந்தி விமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீ தியில்  உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில்     குருபெயர்ச்சி     பலராமர் ஜெயந்தி அட்சய திருதியை 2023  சிறப்பு வழிபாடு நடந்தது.

இதில்    பலராமர்க்கும்           குருபகவானுக்கும்        நெல்லிக் கணி  படைக்கப்பட்டு மலர்   பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது   குருபெயர்ச்சி    மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் உள்ளிட்ட  ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொண்டனர்.

கணபதி ஹோமம் கலசபூஜை நடைபெற்று குருபகவானுக்கும் தீபாராதனைநடந்தது     பலராமர் ஜெயந்தி சிறப்பு வழிபாடும் நடந்ததுஆலயத்தில்  உள்ள பலராமர்க்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டும்          ஸ்ரீ ஆஞ்சநேயர் க்கு பல்வேறுஅபிஷேகம்

புதுக்கோட்டை
ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த குருபெயர்ச்சி விழாவில் பங்கேற்ற பக்தர்கள்

அலங்காரம்   தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

குருபெயர்ச்சி அட்சய திருதியை  பலராமர் ஜெயந்தி  பற்றி மணிக் குருக்கள் கூறியதாவது:  ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு  குருபெயர்ச்சி நடைபெறும் சிறப்பு வழிபாடுநடந்தது.

மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைகிறார். குரு பெயர்ச்சி அடைந்ததும் குருபகவானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறும். . அப்போது இதில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது  நன்மையளிக்கும்                                                                                             அகா தீஜ் என்றும் அழைக்கப்படும் அக்ஷய திருதியை இந்து மத நூல்களின்படி ஒரு நல்ல நாள். திருவிழா நாளில், விஷ்ணு, விநாயகர் மற்றும் லட்சுமி தேவியை வழிபடுகின்றனர். புதிதாக ஒன்றைத் தொடங்குவதற்கு இந்த நாள் சிறந்த நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களை மக்கள் வாங்குகிறார்கள், ஏனெனில் இது குடும்பத்திற்கு செழிப்பையும் நல்ல அதிருஷ்டத்தையும்தருகின்றது என்றார்  அவர்.                                                                                                       .
நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள், அனுமன் திருச்சபை நிர்வாகிகள் நிலவை பழனியப்பன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதில், ஏராளனமான பக்தர்கள் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை,மணிக் குருக்கள் மற்றும்  அனுமன் திருச்சபையினர், ஆன்மிக நெறியாளர் ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர் ,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top