Close
நவம்பர் 22, 2024 5:08 காலை

புதுக்கோட்டையில் பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ விழா

புதுக்கோட்டை

புதுகை சாந்தநாதர் ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு

புதுக்கோட்டையில் பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது .

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில்  பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெற்றது. நல்ல மழை வேண்டி தண்ணீர் அபிஷேகம் மகாதீபஆராதனையும் நடைபெற்றது .

புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி உடனுறை  சாந்தநாத சுவாமிக்கு  பால், தயிர், இளநீர், தேன்,   சந்தனம், மஞ்சள் நீர் திருநீர் உள்ளிட்ட போன்ற 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. மாலையில்,  நந்திகேஸ்வரருக்கு       பால பிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட  பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் கலசாபிஷேகம்  மற்றும் தீபாராதனை   நடந்தது.

புதுக்கோட்டை
சிறப்பு அலங்காரத்தில் சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள்

பின்னர் நந்திகேஸ்வரர் பகவானுக்கு அக்கினியில் நல்ல மழை வேண்டி தண்ணீர் அபிஷேகம் மகாதீபா ஆராதனை நடைபெற்றது.  மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு  அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் வருகைதந்து   சுவாமியை தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டு மன்ற அமைப்பாளர்  மல்லிகாவெங்கட்ராமன்,  திருக்கோவில் நிர்வாகிகள் அரிமளம்  ரவி சிவாச்சாரியார்,   காமேஷ்சிவாச்சாரியார், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

இதைப் போல, புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர், நெடுங்குடி கைலாசநாதர் ஆலயம், திருவேங்கைவாசல், திருவரங்குளம் அரங்குளநாதர், நற்சாந்துபட்டி, பனையபட்டி, வலையபட்டி ஆகிய சிவன் ஆலயங்களிலும்.

பொன்னமராவதி சோழீஸ்வரர் ஆலயம், வேந்தன்பட்டி அருள்மிகு நெய் நந்தீஸ்வரர்,   இலுப்பூர் பகுதியில் உள்ள சொர்ணாம்பிகை சமதே பொன்வாசி நாதர் வௌ்ளாஞ்சார் மீனாட்சிசுந்தேரஸ்வரர், ராப்பூசல் தாயுமானவர்,

தாண்டீஸ்வரம் சத்குரு சம்ஹாரமூர்த்தி, இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் ஆலத்தூர் தர்மாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் மற்றும் இலுப்பூரை சுற்றியுள்ள பல்வேறு சிவன் கோயில்களில் உள்ள நந்தி பகவானுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top