Close
செப்டம்பர் 20, 2024 3:48 காலை

திருவரங்குளத்தில் பிடாரியம்மன் கோவில் திருவிழா

புதுக்கோட்டை

திருவரங்குளம் பிடாரி கோவிலில் நடைபெற்ற திருவிழா

புதுக்கோட்டை அருகே திருவரங்குளத்தில் பிடாரியம்மன் திருக்கோவில்  திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகேயுள்ள திருவரங்குளத்தில் பிடாரியம்மன் திருக்கோவில்  44 -ஆம் ஆண்டு திருவிழா  அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்களால் நடத்தப்படும் 10 -ஆம் நாள் மண்டகப்படி   சிறப்பாக நடைபெற்றது.

தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும், முளைப்பாரி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

 இதைதொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் வீதி உலா நடைபெற்றது.  வட்டார அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்களால் நடத்தப்படும்10 -ஆம் நாள் மண்டகப்படி வெகு விமரிசையாக நடந்தது.

பிடாரியம்மனுக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம்,  சந்தனக்காப்பு, மகா தீபாராதனை நடைபெற்றது

வடிவேல்பூசாரி முன்னிலையில்  நடந்தது பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாளர்களின் கலைநிகழ்ச்சியும் இரவு பிடாரியம்மன் திடலில்  புதுக்கோட்டை சரவணன் தலைமையில் பட்டி மன்றம் நடைபெற்றது. சென்னை நதியா மற்றும் மங்கையர்கைராசி,சாதனா ,வெண்மணிசிந்து, வடிவேல், புதுகை விழுதுகள் கலைக்குழுவினர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை
திருவிழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள்

இதில், அறந்தாங்கி சுகாதார பகுதி மாவட்டம் துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் நமச்சிவாயம், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் புதுக்கோட்டை கிளை செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், திருவரங்குளம் வட்டார மருத்துவர்  ராம்சந்தர்,  திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தம்பிதுரை,

திருவரங்குளம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், செவிலியர்கள் பணியாளர்கள்,  நகர்மன்ற உறுப்பினர் செந்தாமரைபாலு,  ஆன்மிக ஆர்வலர்கள் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top