Close
ஏப்ரல் 6, 2025 12:28 காலை

தீயத்தூர்  சகஸ்ர லட்சுமீஸ்வரர் கோயிலில் ருத்ர ஹோமம்

புதுக்கோட்டை

.தீயத்தூர் சகஸ்ர லட்சுமீஸ் வரர் கோயிலில் நடைபெற்ற ருத்ரஹோமம்

ஆவுடையார்கோவில் அருகே.தீயத்தூர் : அமைந்துள்ள  சகஸ்ர லட்சுமீஸ் வரர் கோயிலில் ருத்ரஹோமம் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே தீயத்துாரில் அமைந்துள்ள  சகஸ்ர லட்சுமீஸ் வரர் கோயிலில் . மாதந்தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் ருத்ரஹோமம் நடத்தப்படுவது வழக்கம்.அதன்படி கணேஷ் குருக்கள் தலைமையில்  ருத்ர ஹோமம் நடைபெற்றது.

இதையொட்டி,   தொடர்ந்து   சகஸ்ரலட்சுமீஸ்வரர் வாஞ்சாகணபதி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, பைரவர் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர்,சிறப்பு அபிஷேகம்       ஹோமத்தில் வைத்து பூஜிக் கப்பட்ட புனித கலச  நீரால் சகஸ்ரலட்சுமீஸ்வரர் மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம்  செய்யப்பட்டது.

சகஸ்ரலட்சுமீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்  .  இதில் திரளான பக்தர் கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top