Close
செப்டம்பர் 20, 2024 1:37 காலை

வரலட்சுமி நோன்பு.. புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை

தாமரை மலர்களால் பூஜிக்கப்பட்ட புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன்

புதுக்கோட்டை அதிஷ்டானத்தில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
ஸ்ரீ அஷ்ட தச புஜ மகாலட்சுமி துர்கா தேவி மஞ்சள் காப்பு அலங்காரம் தீபாரதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் வருகை தந்து அம்பாளை தரிசனம் செய்தனர்.

வரலட்சுமி நோன்பு…

ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக் கிழமையில் வரலட்சுமி நோன்பு கடைப்பிடிக்கப் படுகிறது. இன்றைய தினம் வரலட்சுமி விரதம் கோலாகல மாகக் கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி விரதம் இருந்து அன்னை மகாலட்சுமியை வழிபட்டவர்கள் பெரும் பயனை அடைந் தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

அன்னை மகாலட்சுமி அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது. நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள். மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்றழைக்கப்ப டுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொள்கிறார்கள்.

புதுக்கோட்டை
புவனேஸ்வரி கோயிலில் சுவாமிகளிடம் ஆசி பெறும் பக்தர்கள்

வரலட்சுமியை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும். சிலர் வரலட்சுமியை விதம், விதமான வாகனங்களில் அமரச்செய்து அலங்காரம் செய்வார்கள்.

வரலட்சுமி பூஜைக்கு உங்கள் வீட்டுக்கு வருபவர்களுக்கு உங்கள் சக்திக்கு ஏற்ப தாம்பூலம் கொடுக்கலாம். ஆனால் உங்கள் விருந்தாளிகளிடம் நீங்கள் காட்டும் அன்பே முக்கியமானது. லட்சுமிவிரதம் இருந்து பூஜை செய்பவர்கள், அந்த பூஜைக்கு வரும் சுமங்கலி பெண்களை மகாலட்சுமியாக நினைத்து போற்ற வேண்டும்.

வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமிகளும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள்.  வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு,கல்வி உள்ளிட்ட அனைத்து வளங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top