Close
செப்டம்பர் 20, 2024 1:24 காலை

ஈரோடு கோனார்பாளையம் ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் கோவிலில் நூறாம் ஆண்டு உறியடி திருவிழா

ஈரோடு

கோனார்பாளையத்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் உறியடி திருவிழா

ஈரோடு மாவட்டம், கோனார்பாளையம் ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் கோவிலில் நூறாம் ஆண்டு உறியடி திருவிழா செப். 5 -மற்றும்  6  ஆகிய இரண்டு நாட்கள் மிக சிறப்பாக நடைபெற உள்ளது.

கோனார் பாளையத்தில் ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது.  இக்கோவிலில் நூறாம் ஆண்டு உறியடி திருவிழா  வரும் 5 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி காலை 6.30 மணி ஸ்ரீ கண்ணபிரானுக்கு தீர்த்தம் எடுத்து வர காவிரி ஆற்றுக்குச் சென்று வருதல்.

மதியம் 1.30 மணிக்கு கோ பூஜை, மதியம் 2.00 மணி – 108 சங்காபிஷேக யாக பூஜைகள் ஆரம்பம். ஸ்ரீ விநாயகர் பூஜை புண்ணியாக வாஜனம் பஞ்சகவ்யம் வேதிகா அர்ச்சனை பஞ்ச ஸுக்த்த பாராயணம் சுதர்சன ஹோமம் (திருப்பாவை சாற்றுமுறை) நடைபெறும்.

மாலை 5.00 மணிக்கு மஹா அபிஷேகம் சங்காபிஷேகம், மஹா தீபாராதனை.மாலை 5.45 மணிக்கு அன்னப்பிரசாதம் வழங்குதல். இரவு 7.00 மணி – கலை நிகழ்ச்சி நடக்கிறது.

செப். 6 -ஆம் தேதி புதன்கிழமை-காலை – 11.30 மணிக்கு ஸ்ரீ கண்ணபிரான் மலர்பல்லக்கில் திருவீதி உலா வருதல்.மாலை 4.00 மணிக்கு ஸ்ரீ கண்ணபிரானுக்கு பிறந்தநாள் சீர்வரிசை கொண்டு வருதல் மாலை 5.30 மணிக்கு கலச பூஜை.இரவு 7.00 மணிக்குஸ்ரீ கண்ணபெருமானின் பிறந்தநாள் சிறப்பு விருந்து.

இரவு 7.00 மணி திருப்பூர் ஸ்ரீ காமாட்சியம்மன் பவள வள்ளி கும்மி ஆட்டம் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெறும்.இரவு 9.00 மணி ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் பஜனைக் குழுவின ரின் சங்கீர்த்தன பஜனை நடைபெறும்.

இரவு 9.15 மணி கோவை ஸ்ரீ வாரி நாம சங்கீர்த்தன சபா குழுவினரின் சிறப்பு சங்கீர்த்த பஜனை நடைபெறும்.இரவு 2.00 மணி ஸ்ரீ கண்ணபிரான் மலர் பல்லக்கில் திருவீதி உலா. அதிகாலை 3.30 மணி உறியடித் திருவிழா அதிகாலை 4.00 மணி

வழுக்கு மரம் ஏறுதல் விழா. அதிகாலை 4.30 மணி ஓம் ஹார பிரணவ தீபம் (108) தீப வழிபாடு.அதிகாலை 5.00 மணி மஹா தீபாராதனை. அதிகாலை 5.30 மணி – அருட்பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை குழுவினர் செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top