விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அரை அடி முதல் 10 அடி உயரம் வரை பல்வேறு மாதிரிகளில் 500 -க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் புதுக்கோட்டையில் விற்பனைக்காக வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.
வருகின்ற செப்டம்பர் மாதம் 18 -ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.
மூன்று நாட்களுக்குப் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று பிறகு நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக விநாயகர் சிலைகள் ராஜஸ்தான், கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அரை அடி முதல் 10 அடி உயரம் வரை பல வண்ண பூசி உருவாக்கப்பட்டுள்ள 500 -க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் புதுக்கோட்டைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த விநாயகர் சிலைகள் நீர்நிலைகளின் கரைக்கும் பொழுது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலும் மரவள்ளிக்கிழங்கு மாவு மற்றும் காகித கூழ்களால் செய்யப்பட்ட இந்த விநாயகர் சிலை 50 ரூபாய் முதல் 50,000 வரை விநாயகர் சிலை விற்பனைக்காக உள்ளது. இந்த விநாயகர் சிலை வாங்குவதற்காக புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து முன்பதிவு செய்து வருவதாக விற்பனையாளர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.