Close
ஜூலை 5, 2024 1:08 மணி

அரிமளம் அருகே அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

புதுக்கோட்டை

கே.புதுப்பட்டை கரைமேல் அய்யனார் கோயிலில் நடைபெற்ற புரவி எடுப்பு திருவிழா

அரிமளம் அருகே கே.புதுப்பட்டியில் உள்ள ஏத்தநாடு கண்மாய் கரையில் அமைந்துள்ள கரைமேல் அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவிமரிசையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, அரிமளம் அருகே கே.புதுப்பட்டியில் உள்ள ஏத்தநாடு கண்மாய் கரையில் அமைந்துள்ள கரைமேல் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா  ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை

நடப்பாண்டுக்கான புரவி எடுப்பு திருவிழாவில் சுடுமண்ணால் செய்யப்பட்ட புரவிகள் மற்றும் சுவாமி சிலைகள் கொசப்பட்டி கிராமத்தில் உள்ள குதிரை பொட்டலில் வைத்து சிறப்பு அலங்காரங்கள் செய்து புரவிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் புரவிகளுக்கு கண் திறக்கப்பட்டு  தீபாராதனை காட்டப்பட்டது .

பின்னர், தாரை, தப்பட்டை இசை முழங்க வான வேடிக்கைகளுடன் கொசப்பட்டி குதிரை பொட்டலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ஏராளமான புரவிகள் நீண்ட வரிசையில் எடுத்துச் செல்லப்பட்டன.

புதுக்கோட்டை
தாரை தப்பட்டை முழங்க கோயிலுக்கு செல்லும் புரவிகள்

அதில் முன்னாள் உள்ள குதிரை மற்றும் இரண்டாவது குதிரையில் பூசாரி அமர்ந்திருக்க அவரை குதிரையுடன் பக்தர்கள் பக்திபரவசத்துடன் தூக்கிச் சென்றனர். குதிரையில் அமர்ந்திருந்த பூசாரியை வழி நெடுகிலும் நின்ற ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும்  வணங்கினர்.

குதிரையின் பின்னால் ஏராளமான பக்தர்கள்  சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவு  வரை நடந்து சென்று கரைமேல் அய்யனார் கோயிலை அடைந்தனர். பக்தர்களால் சுமந்து வரப்பட்ட புரவிகள் கரைமேல் அய்யனார் கோயிலில் வைத்து ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் சுற்று வட்டார பகுதிகளான கே.புதுப்பட்டி, ஏத்தநாடு, கரையப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்வில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top