Close
ஜூலை 3, 2024 5:00 காலை

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை.. பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..

புதுக்கோட்டை

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் சமேத அம்பாள்

புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு,  புதுக்கோட் டை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

புரட்டாசி மாதம் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். காக்கும் கடவுளான பெருமாளை புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து வணங்கினால் நாம் வேண்டுவதை வரமாக அளித்து நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அருள் புரிவார் என்பது ஐதீகம்.

இதனால் பெருமாள் கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, சனிக்கிழமை (அக்.14) அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதத்தின் 4 -ஆவது கடைசி சனிக்கிழமை வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.

திருமயத்தில் பழமை வாய்ந்த சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத  கடைசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக அதிகாலை நடை திறக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பெருமாளுக்கு பால், தயிர் ,சந்தனம் , பன்னீர், பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் தீபாரதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களுக்கு கலந்து கொண்டு சத்தியமூர்த்தி பெருமாளுக்கு அர்ச்சனை செய்து துளசி மாலை சாதி சாமியே வழிபட்டனர். வருகை தந்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பக்தர் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

இதையொட்டி, புதுக்கோட்டை வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் திருவப்பூர்,  பொன்னமராவதி, இலுப்பூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top