புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் திருச்சபை யினர் சார்பில் புரட்டாசி மாத அமாவாசை, கடைசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உற்சவர் ஆஞ்சநேயர் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்கள் வடம் பிடித்து பல்வேறு வீதி வழியாக வலம் வந்தனர்.
புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத் துறையைச் சார்ந்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் புரட்டாசி மாத அமாவாசை, கடைசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோவிலில் மூலவர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் வட மாலை அலங்காரத்திலும், மஹா தீபராதனை நடைபெற்றது.
நிகழ்வில் திரளான பக்தர்கள் வருகைதந்து சுவாமியை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் அனுமன் அன்னதான மண்டபத்தில் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு உற்சவர் ஆஞ்சநேயர் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்கள் வடம் பிடித்து பல்வேறு வீதி வழியாக வலம் வந்தனர்.பக்தர்கள் உபயதார்கள் கலந்துகொண்டனர்
ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபையினர், ஆன்மிக நெறியாளர் ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.