Close
ஏப்ரல் 4, 2025 11:58 காலை

புதுக்கோட்டை கோயில்கள் வீடுகளில் நவராத்திரி விழா கோலாகலம்

புதுக்கோட்டை

புதுகை கீழ 2-ஆம் வீதி டாக்டர் சீனிவாசன் அனுராதா சீனிவாசன் இல்லத்தில் நடந்த கொலு காட்சி

நவராத்திரி விழா புதுக்கோட்டையில் உள்ள கோயில்கள் மற்றும் வீடுகளில்  கொலு பொம்மை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை கிழக்கு இரண்டாம் வீதியிலுள்ள டாக்டர் சீனிவாசன்- அனுராதா சீனிவாசன் இல்லத்தில்  வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு  பொம்மை காட்சியில், கை வினை பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

பெண்கள் சிறு குழந்தைகள் சிறுவர்கள் சிறுமியர்கள் வருகை தந்து பார்வையிடுகின்றனர் இதுபோல பல்வேறு வீடுகளிலும் நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.கொலுவை பார்க்க வந்தவர்களுக்கு  பிரசாதம் வழங்கப்பட்டது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நகரில் அருள் பாலித்து வரும் சாந்தநாதர் சுவாமி ஆலயத்தில் நவராத்திரி கொலு சிறப்புடன் நடைபெற்று வருகிறது.  சாந்தநாதர் சுவாமி வெள்ளி கவச அலங்காரத்திலும், வேதநாயகி அம்பாள் சந்தன காப்பு அலங்காரத்திலும் மேலும் உற்சவர் மலர் அலங்காரத் திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top