Close
ஜூலை 7, 2024 11:17 காலை

புதுகை சங்கரமடத்தில் நவராத்திரி விழா…

புதுக்கோட்டை

புதுகை சங்கர மடத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பங்கேற்ற பக்தர்கள்

 புதுக்கோட்டை மேல ஐந்தாம் வீதியில் திலகர் திடல் அருகில் உள்ள சங்கர மடத்தில் நவராத்திரி முன்னிட்டு 34 -ஆம் ஆண்டு ஸ்ரீ சாரதா நவராத்திரி மகோத்ஸவம்  விமரிசையாக  நடைபெற்றது.

நவராத்திரியின் 10 நாட்களும் தினமும் காலையில் ராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்று வருகிறது. பின்னர் சகஸ்ர நாம பூஜை ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை மற்றும் கன்னியா பூஜை சுகாசினி பூஜை தினமும் துர்கா சகஸ்ர பாராயணம் ஸ்ரீ லட்சுமி சஹஸ்ர பாராயணம் ஸ்ரீ சரஸ்வதி சகஸ்ர பாராயணம் நடைபெற்று வருகின்றது.

புதுக்கோட்டை
சங்கரமடத்தில் வைக்கப்பட்டுள்ள கொலு காட்சி

மேலும் உற்சவர் ராஜராஜேஸ்வரி அம்பாள் ஆதிசங்கரருக்கும் மலர் அர்ச்சனை நடைபெற்றது நவராத்திரி கொலுவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் சிறுவர்கள் வருகை தந்து நவராத்திரியினை கண்டு களிக்கின்றனர். மேலும் பாராயணம் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வழிபாடு செய்கின்றனர்.

நவராத்திரியின் நிறைவு நாளான 24 10 2023 செவ்வாய்க் கிழமை விஜயதசமி அன்று மாலை 6 மணிக்கு ராஜராஜேஸ் வரி அம்பாள் ஊஞ்சலில் புஷ்ப அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. நவராத்திரி விழாவை ஸ்ரீ சங்கரமட நிர்வாக கமிட்டியாளர்கள் வெகு சிறப்புடன் நடத்துகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top