Close
ஜூலை 5, 2024 12:13 மணி

காட்டுபாவாபள்ளி வாசல் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

புதுக்கோட்டை

திருமயம் அருகேயுள்ள காட்டுபாவா பள்ளிவாசல் தர்ஹா

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் காட்டுபாவாபள்ளி வாசல் தர்ஹாவில் சந்தனக்கூடு விழா திங்கள்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள காட்டுபாவா பள்ளிவாசல்.

17-ஆம் நூற்றாண்றைச் சேர்நத இந்த தர்ஹாவின் நிர்மாணப் பணிகளுக்கு ஆற்காடு நவாப் முகமதலியும் அவரது பரம்பபையினரும் பெரும் கொடையளித்துள்ளனர். மேலும் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களும் இந்த தர்ஹாவுக்கு பெருமளவின் கொடையளித்துள்ளனர். 1696 -ல் கிழவன் சேதுபதியின் காலத்தில் கொடையளிக்கப்பட்ட செய்தி இங்குள்ள ஒரு கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது.

புதுக்கோட்டை
தர்ஹாவில் ஏற்றப்பட்ட கொடியேற்ற நிகழ்வு

பக்ரூதீன் அவுலியா என்றழைக்கப்படும் காட்டுபாவாவின் சமாதி இங்கு அமைந்துள்ளது. ஆண்டு தோறும் இங்கு  சந்தனக்கூடு  விமரிசையாக நடைபெறும் விழாவாகும். இந்த பள்ளிவாசலானது முஸ்லீம்களும் இந்துக்களும் பெருமளவில் சென்று வழிபடும் தலமாக திகழ்கிறது.

நிகழாண்டுக்கான சந்தனக்கூடு விழா (16.10.2023) திங்கள் கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து 15 நாள்கள் தினமும் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.

புதுக்கோட்டை
தர்ஹாவில் கொடியேற்றப்பட்ட நிகழ்வு

தொடர்ந்து (1.11.2023) புதன்கிழமை நள்ளிரவு சுமார் 1 மணிய ளவில் மின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்தனக்கூடு ஊர்வலம் வாண வேடிக்கைகளுடன் நடைபெறவுள்ளது. இந்து -முஸ்லீம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக புதுக்கோட்டை மாவட்டத்தில் திகழும் இடங்களில்  முக்கியமானது இந்த காட்டுபாவா பள்ளி வாசல் ஆகும்.

ஏற்பாடுகளை ஜமா-அத்  நிர்வாகிகள் எஸ்.முகமதலிஜின்னா, எஸ். அப்துல் லத்தீப், ஏ. முகமதுசிராஜுதீன், எஸ். பக்ருதீன், ஏ.சகுபர்அலி, சையதுஉசேன், நியாஸ்முகமது, முகமது அப்துல்லா மற்றும்  விழாக் குழுவினர்  செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top