புதுக்கோட்டை சின்னப்பா நகரில் அமைந்து உள்ள அருள்மிகு ஐயப்பன் திருக்கோயிலில் ஸ்ரீ சபரி துர்கா 23-ஆம் ஆண்டு சாரதா நவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சபரி துர்க்கை அம்மனுக்கு சிறப்பு விஷயங்கள் மற்றும் மாலையில் சந்தன காப்பு அலங்காரம் தீபாராதனை வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவினை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து வருகின்றனர்.
மேலும் ஆலயத்தில் உள்ள விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவை நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.