Close
நவம்பர் 21, 2024 11:15 மணி

அரியநாச்சிஅம்மன் கோயிலில் நவராத்திரி விழா

புதுக்கோட்டை

அரியநாச்சியம்மன் கோயிலில் நவராத்திரி கொலு

புதுக்கோட்டையில் ஸ்ரீஅரியநாச்சி அம்மன் கோயிலில்  நவராத்திரி விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை நகரில் அருள் பாலித்து வரும் ஸ்ரீஅரியநாச்சி அம்மன் கோயிலில் நவராத்திரி கொலு காட்சியில்  கண்ணைக் கவரும்  கொலு பொம்மைகள்  வைக்கப் பட்டிருந்தன.

நவராத்திரி கொலுவை திரளான பக்தர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.     விநாயகர், சிவன், விஷ்ணு, அம்பாள், முருகன் சுவாமி சிலைகள், இந்துக்களின் பண்டிகைகளை விவரிக்கும் ‘குரூப் பொம்மைகள், பழங்கள், காய்கறிகள்  குழந்தை கிருஷ்ணர் பொம்மை, திருமணம், காதணி விழா, வளைகாப்பு, நிகழ்வு பொம்மைகள், காமதேனு, சிவன் – நந்தி, குழந்தைகள், குழந்தை விநாயகர், பாடசாலை உள்ளிட்ட பொம்மைகள் கொலுவில் இடம் பெற்றுள்ளன.

புதுக்கோட்டை
நவராத்திரி கொலு பொம்மைகள்

ஸ்ரீ  அரியநாச்சிஅம்மன் கோவிலில் நவராத்திரி கொலு கலை விழா சிறப்புடன் நடைபெற்று வருகிறது. தினமும்  ஸ்ரீ அரியநாச்சி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் தீபாராதனை நடை பெறுகிறது.

உற்சவர்  ஸ்ரீ  அரியநாச்சிஅம்மன் ஊஞ்சலில் மலர் அலங்காரத்திலும்  பக்தர்களுக்கு அருள்  பாலித்தார். இதில்,  ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். மாணவ, மாணவியரின் கண்ணைக் கவரும் கலை நிகழ்ச்சிகள்  நடை பெற்றது. நவராத்திரி விழா ஏற்பாடுகளை கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top