புதுக்கோட்டை கீழ 4 -ஆம் வீதி வடபுறம் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு அம்பாள் திருவீதி உலா விமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை கீழ 4ம் வீதி வடபுறம் அமைந்துள்ள இந்து சமய நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
தொடர்ந்து தினமும் அபிஷேகங்களும் ஆராதனையும் மண்டல பூஜை சிறப்பு வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு, முத்துமாரியம்மனுக்கு பாலபி ஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மாலை அலங்காரத்திலும், மஹா தீபராதனை நடைபெற்றது.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது . மாலையில் சந்தனக்காப்பு மலர் அலங்கரித்தில் மகா தீபாராதனை நடந்தது திரளான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.
இரவு மலர் களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உற்சவர் விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் மேளதாளத்துடன் பல்வேறு வீதி வழியாக பவனி வந்தது. பக்தர்கள் தங்களது வீட்டு வாசலில் காத்திருந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
விழாக்குழுவினர் வழக்கறிஞர் ராமநாதன், குபேர சம்பத், விஜய், முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் பல்வேறு சமூக அமைப்பினர்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.